சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

ஆறு மனமே
விடுமுறை நினைவின் வடு
வியப்பாய் பதிவின் ஏடு
வீட்டிற்க்குள்ளே நடந்த திருட்டு
விந்தையாய் மெளனமாய் இப்போ

உறவுகள் இரகசிய இணைவு
உந்துசத்தியாய் மறைமுக பிணைவு
மேசையில் கிடந்த பேர்சும்
மாயமாய் போனதன் மர்மம்

வங்கிஅட்டை அடையாளஅட்டை
சாரதிபத்திரம் மருந்துஅட்டை
யூரோவுடன் இலங்கை பணம்
எல்லாமே தொலைந்த கணம்

பத்து நாட்கள் தேடியே நாமும்
பித்து பிடித்து வீட்டிலே அடைந்து
சொத்து ஒன்றும் நிரந்தரமில்லை
ஆறாதவடுவாய் விடுமுறை சென்றதே