தலையீடு
குடும்பத்தில் அடுத்தவரினது
விவகாரத்தில் மூக்குநுளைப்பது
குழப்பத்தை உருவாக்கிவிடுவது
குணத்தின் தலையீடாகும்
எதிர்மறை அர்த்தங்களோடு
எதிர்த்து அரசியல்நோக்கோடு
ஏடாகூடா செயல்பாட்டோடு
திணிக்கும் தலையீடாகும்
இல்லங்களில் சச்சரவைஅகற்றி
இடர்படினும் இன்பமாய் ஏற்று
இணைவாய் நிறைவாய் என்றும்
தலையீடு இல்லா வாழ்வேசிறப்பாகும்.