தந்தையின் நாளும் வந்ததே இன்று
தந்தையின் பெருமை என்றுமே உயர்வு
தரணியில் இன்று வந்ததே நாளாய்
மானிட வாழ்வில் மகத்தான தந்தை
மங்காச் செல்வத்தின் மகுடமாய் எம்தந்தை
சிந்தை ஒருபுறம் தந்தையின் நினைவு
விந்தையாய் இன்னுமே வியப்பான இறப்பு
கண்ணுக்குள் இன்றுமே அழுகையின் ஒலிப்பு
காலத்தால் அழியாத உன்னத இருப்பு
தளராத நம்பிக்கை கொண்டு வாழ்ந்து
அயராத உழைப்புடன் முன்னேற்றம் கண்டும்
ஐம்பது ஆண்டுகள் பிறப்பின் பெருமையாய்
ஐயகோ காலனவன் முடித்தானே வாழ்வுதனை
நாற்பத்தொன்பது ஆண்டும் இன்றுமாய் நகரந்திட
நாலாபுறமும் மகவுகள் சிதைந்து வாழ்ந்திட
நல்லூரான் மஞ்சநாளால் இறப்பும் வந்ததே
அதேநாளிலே இம்முறை திதியும் வந்ததே