மாற்றம் காணுமோ (548)
இருளுக்குள் வேலைக்கு ஓடி
இல்லமே வரும் வேளை
இதயத்துள் ஒருவித பயம்
இருந்தும் உற்சாக தோற்றம்
விலைவாசி ஒருபக்க ஏற்றம்
தொலைபேசி மறுபக்க சீற்றம்
விடியலில் வருகுதே மாற்றம்
வேலையும் சுமையாச் செல்லும்
குளிர்காற்று நடுக்கம் ஒருபுறம்
வெண்பனி புகையாய் மறைத்திடும்
குவலய மாற்றமும் வந்திடும்
குருதியின் ஓட்டமும் மாறிடும்
மகிழ்ச்சியை அணைத்து நானுமே
மனதார வாழ்தல் நன்றியே