சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பெற்றோரே
அன்பின் காவியம்
அழியாத ஓவியம்
பண்பின் சிகரம்
பாசத்தின் வசீகரம்

கனிவான பேச்சு
கள்ளம்மில்லா மனது
காலச்சக்கர வீச்சு
கடுகதியாய் மறைந்ததே

பெற்றவரின் பெருமை
பெயரோடு என்றும்
பேணிக் காத்திட்டு
பேதைமனம் வாழும்.