வியாழன் கவிதை

Selvi Nithianandan

வெறுமை போக்கிடும் பசுமை ( 569)

மேதினியில் மெல்லவே வந்திடுவாய்
மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய்
மேலோர் கீழோர் பேதமின்றி
மேன்மை கொண்டு வந்தாயே

உழைப்பு என்னும் மூலதனம்
உந்து சக்தியாய் சாதனம்
உயர்ந்து செல்லும் வேதனம்
உறுதியாய் நின்றிடும் ஆதனம்

மானிட ஆரோக்கியத்தின் பாதுகாப்பு
பசி வறுமை ஒழிக்கும் திட்டமாய்
சுற்றுச்சூழல் பல்லுயிர்களின் அரணாய்
சுகாதார விழிப்புணர்வு நாளாம்

பூச்சிநோய் என பயிரும் இழப்பு
புல்பூண்டு நிலமும் புறக்கணிப்பு
மரங்களை நாட்டி பசுமைபேணி
மண்ணிலே மகிழ்ச்சியாய் வாழ்வோமே