சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

காணி
காணி நிலம் வேணும்
பாரதி கூற்று அன்று
சாணி பூசி மெழுக
வீடும் இல்லா இன்று
பேணி காத்த நிலமும்
அடுக்கு மாடி என்று
நாணி கூனி நாமும்
கைவிட்ட நிலை கேளீர்
ஆறு பரப்பு காணி
வீறு கொண்டு நாளும்
நாற் புறமும் மதிலும்
கால் பரப்பு போச்சு
பாதை முற்றம் இல்லை
பகை கொண்டு தொல்லை
பேதை மனம் வெள்ளை
பேரம் பேச வில்லை
நாண்டு பிடித்து தானே
காணி பறிப்பு இன்று
தூண்டும் ஆட்சி போல
நம்பிக்கை துரோகம் செய்யுதே