வியாழன் கவிதை

Selvi Nithianandan

மாறிடும் நிலை (568)
குளிரும் முடிந்து வெயிலாய் மாறி
ஒளியும் வந்து தூக்கம் கலைந்து
வெளியும் நல் ஒலியாய் போக
விழியும் வீங்கி வலியாய் போகுது

பள்ளி விடுமுறை வந்தும் சேர
துள்ளிக் குதிக்கும் சிறுவர் கூட்டம்
காலை மாலை வெளியில் ஓட்டம்
கண்டு களிக்க இருக்கையில் இருப்பு

குளிர்மை தேடி கால்வாயில் ஒருபுறம்
கடலும் நிரம்பி வழியும் மறுபுறம்
நீச்சல் தடாகமும் வழிந்து ஓடும்
கூச்சல் போட்டு விளையாட்டு செல்லும்

வீட்டுக்கு வெளியே குடையும் விரிப்பு
வீதிக்கு வந்தால் தேகமும் எரிப்பு
விஞ்ஞானம் கூடியே பற்பல பாதிப்பு
விந்தையாய் இருக்குதே வியப்பாய் சூழலே