வியாழன் கவிதை

Selvi Nithianandan

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்( 563)

உயிர்கள் வாழத் தேவையான ஒன்று
உலகில் பெரும்பாகமாய் இருப்பது நன்று
உடம்பிலே ஒட்டியே காணப்படுவதும்
உருவம் இல்லாத இருப்பாகும்

மனித வாழ்வின் ஆதாரம் இருப்பதும்
மழையாக பூமியை நனைப்பதும் இதுவே
மண்ணிலே ஆறு குளம் கடலாவதும்
மருந்து தேவைக்கும் பயனாகும்

உயிர்கள் நிலைத்திருக் தேவையானது தொன்றே
பயிர்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைவதும்
மானிடரின் செயற்கை இயற்கை மாசுபாட்டாலே
மண்ணிலே கழிவுகளின் தேக்கம் அதிகரிக்குதே

உக்காத நெகிழிகளை கொட்டி விடுவதும்
பயனற்ற பொருட்களை கடலுக்குள் வீசுவதும்
ஆட்சி அதிகாரங்களை தம்பிடிக்குள் வைத்து
அட்டூலியம் செய்து வாழும் நிலைக்குள்

ஆறவு படைத்த விட்ட நாமும்
அவனியை காப்பாற்ற தினமும்
அழுக்குகளை அகற்றி நாளும்
அகிலத்தில் வளமாய் வாழ்வோம்