பேசாமல் பேசும் உலகமொழி (533)
மானிடத்தின் முதல்மொழியாய்
முகபாவனை கைஅசைவு வடிவமாய்
பேச்சாலும் எழுத்தாலும் முதன்மையாய்
புருவ அசைவு முக்கிய ஒன்றாகும்
உலகின் செவிப்புலனற்றோர் தொடர்பாய்
உலகநாடுகளில் பற்பலகற்கை நெறியாய்
பலநாடுகளிடை அலுவலக மொழியாய்
புரட்டாதியில் உருவாக்கம் பெற்றதே
ஐக்கிய நாட்டின் தேசியஒருதினமாய்
ஜக்கியமாய் பலநாட்டின் விழிப்புணர்வும்
விளம்பரங்களிலும் ஊக்க கொடுத்தும்
பேச்சு திறனற்றவரின் அடையாளமாகும்
எழுபது மில்லியனைக் கடந்தும்
செவிப் புலனற்ற மானிடராய்
செறிவாய் பரந்த கண்டங்களாய்
செழுமையாய் பலரம் உள்ளனரே