வியாழன் கவிதை

Selvi Nithianandan

மரநாளாய் 18.08.2022 9 527)
இயற்கையின் கொடையில்
இதுவும் ஒன்று
இலவச காற்றாய்
கிடைப்பதும் நன்று

மரங்களை நாட்டி
மண்ணை பேணல் சிறப்பு
இயற்கையாய் செயற்கையாய்
சுற்றுச்சூழலுக்கு வளமாய்
இருப்பதும் தனிச்சிறப்பாகும்

ஐரோப்பாவில் ஆரம்பித்து
அனைத்து கண்டங்களில் தருவாகி
ஆண்டுதோறும் கொண்டாட்டமாய்
ஆர்வத்தை உண்டாக்கும் நாளாகும்

காலநிலை மாற்றத்தாலும்
காடுகள் அழிப்பதாலும்
காசினியில் மழையும் குறைவாய்
காத்திரமாய் மரங்களை நாட்டி
காப்பாற்றவே மரநாளாம்

ஐக்கியநாடால் அங்கீகாரம்
ஐக்கியமாய் பலநாடும்
மரநாளாய் பின்பற்றி
மகத்துவமாய் வரவேற்குதே