மிதிவண்டி 525
மிதிக்கட்டையில் கால்வைத்து
மனித சக்தியால் உந்தப்பட்டும்
மின்னாற்றலால் இயங்கப்பட்டும்
மிதிவண்டிகளில் பல உருமாற்றம்
இருசக்கரங்கள் ஒரேதளத்துடனும்
இணைக்கப்பட்ட சட்டமாகவும்
இடவலம் கட்டுபாட்டு தண்டாய்
இருக்குமே கையிலே பலமாற்றம்
ஜரோப்பாவில் மரத்துண்டினால் ஆரம்பமாகி
பிரான்ஸ் ஜேர்மனி இங்கிலாந்து ஸ்கொட்லாந்துஎன்றாகி
ஜக்கியமாய் பலதொழில்நுட்ப மாற்றமாகி
ஆசியாவிலும் உருவானதே சயிக்கிலாய்
சீனாவிலும் நெதர்லாந்திலும் முதன்மையாய்
சீக்கிரமாய் தொழில்புரிவோருக்கு வசதியாய்
பாதசாரிகளுக்கு தனித்த பாதையாய்
பந்தய மிதிவண்டியாய் உருவாக்கம் பெற்றதே
துவிச்சக்கரவண்டி,மிதிவண்டி,ஈருளியாய்
துரிதமாய் பலபெயரும் மாற்றமாய்
தூசிதட்டியும் இப்போ பலபாவனையாய்
பயன்பாட்டிற்க்கு உறுதுணையாய் இருக்குதே