சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தூக்கம்

பூமியில் பிறந்திட்ட உயிர்களுக்கு
தேவையான தொன்றும்
பூரண ஆரோக்கிய தூக்கமே
சிறந்த பலனை வெளிக்காட்டும்

மருத்துவம், கல்வி, சமூக நோக்கு
தூக்கக் கோளாற்றின் தடுப்பாகும்
ஊக்குவிப்பாய் மருத்துவத்திற்கான
உலக அமைப்பினால் வருடத்தோறும்
மார்ச் மாதத்தில் உருவான சிறப்பு நாளாகும்

நிம்மதியற்ற தூக்கம் நோயினை உண்டாக்கி
மனஅழுத்தம் ,மூளைசிக்கல், நினைவாற்றல்
இழப்பு ,சோர்வு மருத்துவத்தின் ஆய்வாகும்

இரவில் பானங்களை அருந்துவதும்
இணையம்.அலாரம் , தொலைபேசி, .
தொலைக்காட்சி,சூரிய வெளிச்சம்
தூக்கத்கு இடைஞ்சல் தருமே.

பகலில்தூங்கினால் ஆரோக்கிய குறைபாடு
இரவில் தூங்காமல் தவித்தால் மனக் குறைபாடு
சிறுவர் தொடங்கி பெரியவர்வரை உடலுக்குஓய்வோடு
நிறைவான தூக்கத்தோடு வளமோடு வாழனுமே