அகவையின் உயர்வு
அகவை உயர்ந்து கொள்ள
ஆளுமை சிறந்து விளங்க
அன்பால் படர்ந்து விரிந்து
அரவணைப்பில் உச்சம் செறிந்து
ஆசாத்திய திறமை கண்ட
அதிபருக்கு அகவை திருநாளாம்
பவளவிழா மெல்லென கண்டு
பவித்திரமாய் சிறுவர்களை கொண்டு
பல்துறை வித்தை கற்று உயர்ந்து
பா முகமாய் வரவேற்க்கும் வேந்தனுக்கு
பாக்கியமாய் பலருக்கு கிடைத்திட
பரிசான அகவை திருநாளாம்
நாதக்குரலோன் கிடைத்திட்ட பட்டம்
நானிலித்தில் சுற்றிவரும் கூட்டம்
நாளும் நன்றியாய் வடம் இழுக்கும் திட்டம்
நலமுடன் வளமாய் என்றும் வாழ்கவே
நற்றமிழ் பணிக்கு வலு சேர்கவே
வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு