சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

நாதம்
மனிதனால் உந்தபட்டு
செவிவழி கேட்கப்பட்டு
இசையாய் ஈர்க்கப்பட்டு
பலருக்கு விருந்தாகும்

சுருதியாய் சுரமாய்
இராகமாய் பெற்றும்
ஓம்காரமாய் ஒலிப்பது
நாதத்தின் இசையாகும்

பிரபஞ்ச மூலமாய்
பிரமனின் தோன்றலாய்
ஆதார சக்தியாய்
அவனிக்கு கிடைத்ததே