சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பழமை
பழமை என்றும் புதுமை
பாடல் எப்போதும் இனிமை
பாட்டன்பாட்டி என்றாலே முதுமை
பலராலும் தள்ளப்படும் தனிமை

முதுமை வந்தாலே வறுமை
முடங்கி விட்டாலே கொடுமை
முரண்படும் வார்த்தையால் சிறுமை
அரணாய் இருப்பது நம்கடமை

பழமை தேடுவதில் பலரும் நாட்டம்
படிப் படியாய் வளரும் கூட்டம்
பழமை மாறாத பலசுவடுகள்
பரணியில் இருப்பது பெருமையே