வியாழன் கவிதை

Selvi Nithianandan

வாழ்ந்த சுவடுகள் (518)
மூத்தோர் வாழ்ந்திட்ட அத்தியாயம்
வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம்
முன்பின் முரணாய் இருந்தாலும் கூட
முழுதாய் பெற்றிடும் வரப்பிரசாதம்

மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்
முழுமதி நிலவின் ஒளிர்வின் சரிதம்
மூச்சுப் பேச்சாய் இணைவின் சிறப்பு
முதுமைகூட தனித்து விடாப் பொறுப்பு

உறவினைச் சொல்லி பரம்பரை வாழும்
நன்மை தீமை உறவுகள் சேரும்
ஊரும் பெயரும் இன்றும் கூறும்
உலகம் போற்ற வந்தனை செய்யும்

புலத்து வாழ்வில் முதுமையின் பயம்
புலம்பி புலம்பி வருகுதே ஜயம்
புன்னகை தொலைத்து தனிமை வழிகாட்டி
புழுவாய் துடித்து கண்ணீர் சுவடுகளாய்

திருத்தம் –
கடந்தவாரம் 519 போட்டுவிட்டேன்
இந்தவாரம் 518