அன்னையர் தினமதாய்
ஆண்டுதோறும் வந்திடும்
அவனியிலே சிறந்திடும்
அகமும் மலர்திடும்
அன்னைக்கென்ற நாளாகும்
அமெரிக்காவிலே ஆரம்பம்
ஆசியா ஐரோப்பாவிலும் கொண்டாட்டம்
அன்னைகளின் அர்ப்பணிப்பும்
அடையாளத்தின் சின்னமாகும்
பூக்கள் அட்டைகள் விற்பனைகள்
பரிசுகளாய் கடைகளில் நிறைந்திடும்
பூரிப்பாய் மகவுகள் காத்திடும்
புனிதமாய் அன்னையை போற்றிடுவோம்