சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

மொழி
பேச்சுக்களை பேசவும்
எழுத்துக்களை எழுதவும்
தெரியப்படுத்தும் கருவியே
அவரவர் மொழியாகும்

அவனியில் பலமொழியும்
ஆதியிலே வந்தமொழி
அன்னையிடம் கருவறையில்
கற்றுயர்ந்த மொழியாகும்

புலம்பெயர் தேசத்திலே
தாய்மொழி ஒருபுறம்
பிறமொழி மறுபுறம்
இல்லத்திலே இணையாகும்

எத்தனை மொழிகள் கற்றாலும்
எண்ணத்தில் இனிய எம்மொழி
ஏணிப்படியாய் உயர்ந்தும் தானே
ஏற்றம் கொண்டு வாழுமே எந்நாளும்