சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பட்டினி
நாடுகளுக்கிடை பாரிய பஞ்சம்
நலிவடைந்து பலரும் தஞ்சம்
நாணய ஆதிக்கத்தாலே மஞ்சம்
நா நயத்தாலே தீர்த்குதே வஞ்சம்

கொடிய யுத்தம் ஆரம்பம்
கொடூர பசியால் மானிடம்
கொடுங்கோல் ஆட்சி ஒருபுறம்
கொன்று குவிக்கும் மறுபுறம்

சாவினது விழிம்பில் நாடுகள்
சரித்திரம் தேடுது ஆட்சிகள்
சாக்கடை போன்ற கட்சிகள்
சாபமாய் காட்டுதே காட்சிகள்

ஒருசாண் வயிறுக்கு போராட்டம்
ஒருகவளம் உணவின்றி திண்டாட்டம்
ஒத்தாசை கொடுத்து உயிரையும்
ஒற்றுமையாய் காத்து நிற்போமே