அன்னையின் மூன்று ஆண்டா
காலச்சக்கரம் வேகமாய் சுழலுது
கனதியாய் இதயமும் நோவுது
காலமும் மூன்றாய் கடக்குது
கண்ணீரும் கலங்கியே வடியுது
வாரம் ஒருபேச்சு காதில்கேட்கும்
வந்த செய்தி வாட்டியே வதைக்கும்
வதனமும் எப்போதும் மலர்ந்தேநிற்க்கும்
வனப்பான உம்முருவம் வந்துபோகும்
கண்ணாடி அணிந்தும் பார்க்கவில்லை
பின்னாடி யாரையும் பேசியதில்லை
பத்திரிகை படிக்காமல் இருப்பதில்லை
பசியென்று வாய்திறந்தும் கேட்டதில்லை
பத்திரமாய் சொல்லும் வார்த்தைகூட
இப்போ ஒலிக்கவில்லையே