வியாழன் கவிதை

Selvi Nithianandan

உன்னதமாய் உன்னாலும் முடியும்
மகளீர்கே உரித்தான நாளாம்
மங்கையர் மகிழும் தினமாம்
மகிக்கும் உந்தன் பெயராம்
மகுடமாய் எழுந்திடு பெண்ணே

ஆணுக்கு சரிநிகர் நீயே
அடுக்களை தாண்டி ஆசிடை பெற்றாய்
அடிமையை உடைத்தெறி பெண்ணே
ஆளுமை அவனியில் பெருமையே

விண்ணிலும் மண்ணிலும் பலரின் சாதனையேடு
விந்தையல்ல இப்போ வியப்புடன் எழுந்திடு
விறுவிறுப்பாய் எழுந்து இருளை விரட்டிவிடு
விடியல் உனக்கானது விருட்சமாய் வளர்ந்திடு

பெண்ணாலே பற்பல பரிணாமம்
மண்ணிலே பேதமை ஒழியனும்
பெருமையாய் எண்ணியே பெயரோடு வாழனும்
பெண்ணே பேருவகையாய் இருக்கனும்