சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

திமிர்
பணத்தால் பலருக்கு வருவதும்
பந்தாகாட்டி அவமதிப்பு செய்வதும்
பகைமை உணர்வை சீண்டுவதும்
பட்டம் பதவிக்காய் போட்டிபோட்டு
பத்திரகாளி ஆட்டம் காட்டும்

வார்த்தை பிரயோகம் பண்ணுவதும்
வாக்கு வாதத்தால் பேசுவதும்
வாசற்படிவரை தள்ள வைப்பதும்
வாட்டம் வரும்போதும் வந்திடும்
வைரக்கியமான அகத் திமிரே