பருவநிலை மாற்றம் பரிதவிகும் உயிர்களும்(503)
காலத்தின் கோலம் கனதியாய் ஞாலம்
கடுகதியான தாக்கம் கடப்பதால் ஏக்கம்
காற்றோடு புகையும் காடுகளின் அழிப்பும்
கடல்மட்ட உயர்வும் கரைபுரண்டு ஓட்டம்
துருவத்தி்ல் மாற்றம் துயரத்தில் உச்சம்
பருவத்தின் ஏற்றம் பக்கவிளைவின் தாக்கம்
பனிக்கட்டி உருகி கடல்போலக் காட்சி
பன்னாட்டு அரசும் பசுமைக்காய் முயற்ச்சி
பருவங்கள் பலதும் படிபடியாய் மாற்றம்
பட்டினியின் விழிம்பில் பரிதவிக்கும் உயிர்கள்
பயிற்ச்செய்கை அழிவும் பகலவனின் மாற்றம்
பகல் இரவாய் தோற்றம் பஞ்சபூத பசியாற்றம்
குவலயக் குன்றிலே குளிரான மழையும்
குளம் குட்டை நிரம்பி வளங்களைஅழிக்குதே
பறவைகள் விலங்குகள் திசைமாறி தஞ்சம்
பசிபோக்க உணவின்றி பஞ்சத்தால் வாட்டம்
காலச் சுவட்டினிலே கண்டிராத தொழில்நுட்பம்
ஞாலத்தில் விடைபகிர பற்பல முன்னேற்றம்
வானத்தில் கூட வடமிழுக்கும் வல்லரசுகள்
வழிதேடும் வரலாறாய் தளம்போடும் தடயங்கள்
நாட்டுக்கு நாடு போட்டிபோட்டு வளர்ச்சி
சோற்றுக்கு கூட வழியின்றி தளர்ச்சி
கூடுவிட்டு கூடுமாறும் மானிடத்தின் சுழற்ச்சி
ஏட்டினிலே எழுதிடலாம் எண்ணத்தின் வீழ்ச்சி
இயற்கையும் எல்லாம் மாறித்தான் போச்சு
இடிமின்னல் மழையும் புயலுடன் வந்தாச்சு
இருப்பிடங்கள் வெள்ளத்தால் அழிந்துதானும் போச்சு
இறைவனின் படைப்பில் நியதியாய் ஆச்சு
மாற்றமும் பலகண்டு மாறுமா உலகிலே
மதிகொண்டு வென்று மகுடமாய் சென்று
பருவத்து மாற்றமும் பலியாகும் உயிரையும்
பக்குவமாய் இருகரம் இணைத்து மீட்டிடலாமே.