மாற்றத்தின் திறவுகோல்
மாற்றத்தின் திறவுகோலும்
மாறியதும் அளவுகோலாய்
ஏற்றத்தின் வெளிப்படையே
ஏணியாய் உயர்த்திவிடும்
பெரியவர்கள் பின்நின்று
இளையவர்களை முன்நிறுத்தி
காரியங்கள் செய்வதற்காய்
கற்சிதமான இணைப்பாகும்
படித்தோர் பாமரர்
பணம் ஏழை
பாகுபாடு உதறிவிட்டு
பசி பட்டினியில்
வாழும் உயிர்களுக்கு
திறவுகோலாய் ஊன்றிடுவோம்