கனவு மெய்ப்படவேண்டும்
பாசமாய் உறவுகள் நேசித்திட
பார்போற்ற என்றும் வாழ்ந்திட
பிளவுபடா வேராய் இருந்திட
பின்னிப் பினைந்து சேர்ந்திடனும்
உள்ளதைக் கொண்டு சிறந்திட
உவகையாய் என்றும் நிலைத்திட
உலகிலே வறுமை ஒழிந்திட
உருட்டும் பிரட்டும் அழிந்திடனும்
நாடுகளிடை போட்டி இல்லாது
நா நயத்துடன் என்றும் சிறந்து
நல்லறிவு நானும் உணர்ந்து
நற்பெயருடன் வாழல் வேண்டும்
செல்வி நித்தியானந்தன்