சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

சிறுமை கண்டு பொங்குவாய்

காலச் சுழற்ச்சி வேகம் போலவும்
ஞாலத்தில் பெருமை கொண்டு வாழ்தலும்
கோலம் மாறுவதுமானிடத்தின் நிலையும்
சீலமும் குற்றமெனில் சிறுமை கண்டுபொங்கிடு

சுதந்திர பூமியில் குற்றங்கள் ஏராளம்
சுற்று முற்றிலும் சூழ்ச்சிகள் தாராளம்
சூட்சுமம் ஒழிய சுடராய் எரிந்துவிடு
சுமையா இருந்தா பொங்கியே எழுந்திடு

வீட்டுக்குள் சண்டை வெளியிலே வேசம்
வெட்டிப் பேச்சு நடிப்பு கோசம்
வேலை திண்டாட்டம் பொங்கிடும் பாசம்
கொலை கொள்ளை அழியுது தேசம்

ஊருக்குள் செய்தி உருட்டும் பிரட்டும்
உணவுக்கு சண்டை உறவுக்குள் பகைமை
பணப் பசிமேவி வயிறுப்பசி மறந்து
பகடாய் போவதாய் பொங்கித்தான் பயனா?