ஈரம்
விண்ணிலே கனமாய் போகவே
மண்ணிலே மழையாய் வடியவே
எண்ணிலா உயிறும் சிதறியே
கண்ணிலே கசிந்ததே ஈரமாய்
வீடுகள் சுவருடன் கசிவாய்
வயல்கள்முற்றாய் சேதமாய்
வலிமை இழந்த நிலையாய்
வந்ததே பேரிடர் இழப்பாய்
ஈரத்திலே தவளையின் வாழ்வு
ஈன்றவரும் சோகத்திலே சாவு
ஈனம் துறந்து ஈகையேந்தி
ஈடேற்றம் காண வழிகாட்டுவாயா