சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பனிப் பூ

ஆகாய போர்வைக்குள்
ஆனந்த ஒளிந்திருப்பு
ஆச்சரிய வருகைக்குள்
ஆளுமை காத்திருப்பு

வெள்ளை கம்பளமாய்
வெளியே படர்விரிப்பு
கொள்ளை அழகுடனே
கொட்டும் உன்பூரிப்பு

துருவமும் இரண்டும்
துகினமாய் வனப்பு
துள்ளி விளையாடும்
துரிதமான பனிப்பூவே

(துகினம்=பனி)

செல்வி நித்தியானந்தன்