சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தேர்தல்

தேர்தல் வந்தாலே
தேன்மழை பேச்சும்
தேடித்தேடிவாக்குகேட்டு
தேவைதனை அடைவது
தேர்தல்

தலைமை கதிரைக்காய்
தன்னலம் பேணலும்
தகுதி பார்ப்பதும்
தட்டிக் கழித்தலுமே
தேர்தல்

துண்டுக் கூட்டத்தை
துரத்தி யடிக்கனும்
துப்புக் கொடுத்து
துணை போகும்
தேர்தல்

சகதி பட்ட தேர்தல்
அகதி வாக்கும் சேரும்
மிகுதி பெட்டி நிரம்பும்
தகுதி ஆவார் அவரே

செல்வி. நித்தியானந்தன்