சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

நேரம்
சுற்றும் பூமியின் காலம்
சுழலும் வேகத்தின் நேரம்
சுற்றுவட்ட பாதை காட்டும்
சுட்டிக் காட்டியே வந்திடும்

காலம் நேரம் பார்த்த பந்தம்
பாலம் போல வாழும் என்றும்
ஏலம் போட்டு வெட்டிக் கொல்லும்
ஞாலம் இப்போ மாற்றம் கண்டும்

இருசுடர் ஒளியின் மாற்றம்
இருள் பகலாய் தோற்றம்
இல்லற வாழ்வில் ஒட்டம்
இணைவாய் இன்பமாய் நகருதே