சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பிள்ளை கனி அமுது
கொஞ்சும் மொழி பேசி
கொள்கை கொண்ட நேயம்
மிஞ்சும் அன்பு தாங்கி
மிரள வைக்கும் மாயம்

விஞ்சும் உலகில் கனியாய்
விந்தை கொண்ட விருப்பு
எஞ்சும் நாளும் உமக்கே
வீறு கொள்ளு பொறுப்பு