சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தை மகளே வருக
ஆங்கில மாதத்தில் அதிபதியாய்
அவனியில் பல மகிழ்வாய்
ஆதவனை நேசிக்கும் பெருநாளாய்
அடுத்து வருமே பலதிருளாம்

நாட்காடியில் முப்பத்து ஒன்றாய்
நானிலத்தில் சிறந்த மாதமாய்
நான்குநாள் பொங்கள் பெருநாளாய்
நனிமிகு நல்லதொரு மாதமாகும்

பட்டாசுசத்தமுடன் பரவசமாய் வந்திடுவாய்
பார்போற்ற அனைவரும் கண்டுகளித்திடவே
பசிபட்டினி யுத்தம் ஒழியனும்
பதட்டமில்லா வரவாய் தைமகளாய்வரனும்