வியாழன் கவிதை

Selvi Nithianandan ஜந்துமாகி இன்று (அம்மா)

Selvi Nithianandan

ஜந்துமாகி இன்று
அன்னையின் ஆண்டு ஜந்து
அகமும் ரணமாய் வெந்து
அதிகாலை கண்ணீரும் வழிந்து
அலரி அடித்து எழுந்து

எனக்குள் இருப்பதாய் நினைவு
எண்ணியே கழியுதே வாழ்வு
மறந்திட முடியாத சாவு
மாரடைப்பே மரண முடிவு

வயோதிபம் குன்றா நிலையும்
வளைந்து சுறுசுறுப்பு வேலையும்
வட்டவடிமாய் வதனத் தோற்றமும்
வாஞ்சையாய் அணைக்கும் அழகும்

எட்டு மகவுகளின் சொத்து
ஏற்றதாழ்வு கிடையா முத்து
எட்டும் தூரமும் மறையுது
மறக்கத்தான் எம்மால் முடியுமா?