08.03.22
கவி ஆக்கம்-54
திமிர்
அருமந்த உயிரில் ஆணவம் புகுந்தால்
பருவம் வந்த பயிரில் பூச்சிகள் நுழைந்தது போல்
உருவம் இழந்து ஊசிப் புழுவாய்
பாழாய்ப் போன புற்று நோய் போல
துருப் பிடித்த கருவே அழிந்திடுமே
சதிரத்தில் அன்பு ,பொறுமை,கொண்டால்
சாதுரிய ஆதரவு பெருகுமே
ஆத்திரம் மூண்டால் இரத்தம் கருகுமே
என்ன செய்வதென்று தெரியாது
வன்சொற்கள் பேசுவது புரியாது
கோபக்கனல் கண்ணில் தெரிவது
மனம் அறியாது சதிராட்டம் போடும்
உயிர் ஊசலாட்டமாட அடங்கிடுமே
திமிராட்டம்.