மண்ணுக்காய் மடிந்தீர்கள்
மக்களுக்காய்
குரல் கொடுத்தீர்கள்
மட்டியிடாத மற
தமிழன்
மரணத்துக்கு அஞ்சாத புலி வீரன்
புறமுதுகு காட்டாத புறநானுற்று போர் வீரன்!
ஆணிவேரை அழிக்க வந்த எதிரி மீது
ஆத்திரம் கொண்டு பாய்ந்தீர்கள்!
இறுதி சமர்
ஆனந்த புரத்தில் காட்டிய
உங்கள் வீரம்
அளப்பெரியது
ஆற்றல் மிக்கது!
ஆசைகளை மனதில்புதைத்து ஆற்றல்களை
மண்ணில் விதைத்து அஞ்சாத நெஞ்சமும்
அடங்காத மொழிபற்றும்
பார்போற்ற வாழ்ந்தீர்கள்
பாரில் நாம்வாழ வழி
சமைத்தீர்கள்..
உமை வணங்குகின்றோம்🙏🙏
செல்லையா செல்லம்மா அன்பு மகள்
கணவர் நாகேஸ்வரன்
கமலேஸ்வரி
செல்லமாக மதி
என்று அழைக்கபடும்
தமிழ்ச்செல்வி..!
அக்காவின் நினைவாகவும்,
அனைத்து மாவீரர் நினைவாகவும்,
27.11.22
காற்றலைக்கு எடுத்து வருகின்றோம்…
- 25/11/2022
- சிவாஜினி ஶ்ரீதரன் குடும்பம் Swiss.
மண்ணுக்காய் உயிர்நீத்த
மாவீரச்செல்வங்களுக்கு
வீரவணக்கம்
வீரப்பெண் தமிழ்ச்செல்விக்கு வீரவணக்கம்.நீவிர் கண்ட கனவு
நனவாகட்டும்.
அமரர் நாகேஸ்வரன் கமலேஸ்வரி தமிழ் செல்வி
விண்ணதிர மண்ணதிர வீரமானீர்கள்
விடுதலை வேண்டி வேங்கையாகி மடிந்தீர்கள்
உங்கள் தியாக இறப்புகள் மறக்க முடியாதவை
மறைந்தவர்கள் எம்மை விட்டு பிரிந்தவர்களல்ல
என்றும் எம்மில் நெஞ்சில் நினைவில் வாழ்பவர்கள்
ஆன்ம ஈடேற்றம் பெற பிரார்த்தனை செய்வோம்
தமிழ் செல்விக்கு எமது வீரவணக்கம் எம் மக்களுக்காக விடுதலை வேண்டி மடிந்த உங்கள் இறப்புகள் மறக்க முடியாதவை
மறைந்தாலும்
என்றும் மக்கள் நினைவில் வாழ்பவர்கள்
ஆன்ம ஈடேற்றம் பெற வேண்டுகிறோம்.