சந்தம் சிந்தும் சந்திப்பு
அங்கலாய்ப்பு
ஊரின் நினைப்பு உள்ளவரை ஊசலாடி
வேரறுத்து வீசப்பட்ட விழுதுகள் நாமே
பாரினில் உறவுகள் பரந்தும் வாழ்வியலை
அழகாக நகர்த்தினாலும் அங்கலாய்ப்பு நாளுமே
மனதை வருடி மகிழ்வைக் குறைக்கும்
மருத்துவம் காசில்லை மருந்தும் விலையில்லை
சினமில்லாத சேவை சிவிலியர் பார்வை- ஆனால்
சிறப்பு எம்மூரென்று சொல்லிச் சொல்லியே
வாழ்வை நகர்ததும் வளக்கமாய்ப் போச்சு
வெந்து வெந்து வேகுவதாய்ப் போச்சு…