சந்தம் சிந்தும் கவிதை

genga stanley

எதிர்ப்பு அலை

சீதனம் சீர் கேட்கும்
சீரழிந்த சமூகமே.
ஏதனம் ஏதுமில்லா
ஏதிலிப் பெண்ணிடம்.
சீர் வாங்கி செய்தபின்
சீராச்சா உன் அவா.
போராடும் அவள் தொனி
எதிர்ப்பு அலை உன் வாழ்வில்.
தாயை வீட்டுக்குள் வைத்து பூட்டிய
தனயன் அம்மாவின் ஊதியப் பணத்தை பெற்றானாம்.
தாயோ தரையில் இருந்த மண்ணை அள்ளி
உண்டாளாம்.
இந்த மாந்தையர் என்று திருந்துவாரோ
இவருக்கு காட்டுங்கள் எதிர்ப்பு அலை.
நிலை நடுங்குகிறது மக்கள் அலை
கோடுகள் போட்டும் தீராத அலை.
கொடுமை பல புரிகிறதே.
யார் சொல்லியும் கேளாதவர்.
மனித நேயமா பார்ப்பார் இவர்
போர் என்ற போர்வையில்
பாரினை அழிக்குதே
எதிர்ப்பு அலை.

கெங்கா ஸ்டான்லி