வியாழன் கவிதை

Kavikco Parama Visvalingam

கல்லடி …..

(இக் கவிதை 16 வருடங்களிற்கு முன்
லண்டன் தமிழ் வானொலில் ஒலிபரப்பானது.
இது மீழ்பதிவு)

மாமரத்து தோப்பிலே மாலைநேரப் பொழுதிலே
காய்கள் தொங்கும் கிளையெலாம் கல்லடியால் தூங்கலே
தங்குமிட சூழலில் தாண்டும்தலை முறையினை
தாங்கும் மனம் தூங்கிடாமல் தந்தவலி சொல்லடி.

காகிதப்பூ வனத்திலே தேனெடுத்த வண்டெலாம்
சேகரித்த வதையினை சிலோனுக்கு விற்றதாம்
புரிந்திடாத புரியலை பொரியல்; வறுவல் ஆக்கிறார்
போனவருசம் கருகியதை இலவசமாய் விற்கிறார்.

மா விதைத்த மண்ணிலே மரணித்த உயிர்ப்பிலே
மறுபடியும் தோப்பிலே காய்கனிகள் தொங்குது
பார்ப்பவர்கள் கண்ணடி பட்டுவிட்ட தென்னமோ?
பட்டவடு என்னடி? பாவம் மீண்டும் கல்லடி!

சத்தியசீலர் இப்புவிதன்னில்
மீண்டும் வந்திட வேண்டுகின்றோம்
உத்தம குணத்தோர் உடனிருந்தாலும்
உதாசீனப் படுத்துகின்றோம்

இன்றைக்குத்தானா தேடுகிறோம்?
இதையே தொடர்ந்து பாடுகிறோம்
இனிமேலாவது உணர்வோமா?
இணைந்தே நாங்கள் உயர்வோமா?

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

https://studio.youtube.com/video/qcfqm_efHm4/edit