வியாழன் கவிதை

Kavikco Parama Visvalingam

வெறுமை போக்கும் பசுமை

பசுமையான நினைவுகளே
பட்டாம்பூச்சி உறவுகளே
பாடு பட்டோம் நாம் கழனியிலே
பகிர்ந்துண்டோம்; உலகினிலே.

குச்சு வீட்டினில் கோடிசுகம்
கோயிலைச் சுற்றி நாலு குழம்
நஞ்சை புஞ்சை தந்த வரம்
நாங்கள் என்றும் உங்கள் வசம்..

பிறந்ததும் சொட்டு மருந்துடனே
பெரும்படை ஒன்று நகர்கின்றது
பெருவாரி மக்களிற்கோ
வைத்திய விருந்து தொடர்கிறது.

கோழி ஒரு கூட்டிலே
முட்டை ஒரு கூட்டிலே
கொட்டை இல்லா பழங்களெல்லாம்
குவிந்திருக்கு கடையிலே

பசுமையைச் சுற்றிய வெம்மையினை
காணாதிருந்தவர் கருணைகொண்டார்
எருமைகள்போலே இருந்தவர்கள்
எழுந்து வணங்க தலைப்பட்டார்.

பசி எடுக்கும் முன்னாலே
பயிர் வளர்த்த தாயம்மா
உயிர் வளர்த்தோம் உன்னாலே
உனைக் காப்போம் கண்போலே.

இது உலக ஆரோக்கிய, தாவர தினம்.

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்