சந்தம் சிந்தும்
வாரம் 162
இரண்டு சுண்டு அரிசி
அன்றைக்கு அளந்தது
அவ்வளவும் தான்
இரண்டு சுண்டு அரிசி
ஏழு பேர்
போஜனம்
மாங்காய் கறியுடன்
அளந்து பரிமாற
மறு முறை தங்கை கேட்தற்கு
கோபம் வந்தது!
சட்டியில் இருந்தால் தானே
அகப்பையில் வரும்
அதட்டி மறுதலித்தாலும்
உள் நேருடல்
நியாயமான பசிக்கு
கோபம் கொண்டோமே
எங்கே தவறு
இல்லாமையை இல்லாமல்
செய்வது தானே
தீர்வு !
தீர்வு காண
வெளி நாடு போவோமா ?
க.குமரன்
யேர்மனி