சந்தம் சிந்தும் கவிதை

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 161

ஈர ஆடை
பாடசாலை
மணியோசை கேட்டு
மருண்டு ஓடி வந்து
நிரையாக நின்று
இறை பாடல் பாட
ஒரு மாணவனின் கை
மறு மாணவனின்
ஆடையில் பட்டதே !
ஈரம் காயாத
ஈர ஆடையது !
கண்களில் கேள்வியுடன்
அவனைப் பார்க்க
ஒற்றை ஆடையே
உடுத்த இருப்பதால்
உலர்த்துகின்றேன்
உடல் சூட்டில்
ஒவ்வொரு நாளும்
என்றான்
ஈரமாகி போனதே
இவன் கண்கள் !

க.குமரன்
யேர்மனி