வியாழன் கவி
ஆக்கம் 79
பூக்கட்டும் புன்னகை
மஞ்சன சொகுசும்
துஞ்சும் நாட்களும்
பல நாட்களானால்
வெண் தழல்
சூடும்
பின் புற
புண்களும்
கழிப்புகள்
தாங்கும் அங்கிகளும்
முகம் சுளிக்கும்
நூகர்ச்சி தரும்
போது !
வெள்ளை அங்கிப்புறா
ஒன்று
பிறந்த சிசு போல
சுத்தம் செய்து
மருந்துகள் இட்டால்
நன்றியுடன் புன்னகைக்கும்
அந்த வதனத்தை
பார்க்கையில்
பூக்கட்டும் புன்னகைகள்
க.குமரன்
யேர்மனு