சந்தம் சிந்தும் கவிதை

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 160

கடல்
கரை வந்து
கடல் போகும்
அலை மோதி
அது மேவி
செவி ஓசை
தனை தாவும்
நிலையாய் நின்று
நிதமும் மறையும்
நீல வானமும்
கரு மேகமாகும்
மாயம் என்ன
மந்திரமோ
சொல்ல ஓடிவா
கடலலையே

க.குமரன்
யேர்மனி