சந்தம் சிந்தும் கவிதை

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம். 157

சிலுவை ஒன்று பேசுகிறது

துயிலும் இல்லத்தில்
ஆறடி நிலமும்
எனக்கு இல்லை
அளந்து வைத்த
சிறு இடத்தில்
சாம்பல் குடுவையில்
அடங்கி போகின்றேன் !

எனக்கு அடையாலம் தருவது
சிலுவையில் என் பெயரும்
தோற்றமும். மறைவும்
எழுதிய முகவரி தான் !

உறவுகள் பந்தங்கள் என்று
எவரும் உறங்கவில்லை அருகில்
எந்த வித சலனமும்
எனக்கு இல்லை
நிர்மலமாக அமைதியோடு
இருக்கின்றேன்!

நாளும் கிழமைக்கு வருபவர்கள்
சுத்திகரிப்போடு மெழுவர்த்தி்ஏற்றி
நான் சாந்தி பெறுவதற்காக
மௌனத்தை தவழவிடுவார்கள்

எனக்கு என்று சொத்தும்
என்னை முன் நிலைப்படுத்துவதும்
எனதாகிக் போன
இந்த சிலுவைதான் அன்று!
எனக்காக பேசுவதும்
சிலுவை தான் இன்று!

க.குமரன்
யேர்மனி🥲