ஆண்டுகள் முப்பத்தைந்துள் நுழைகின்ற பந்தம்.
ஆண்டுகொண்டு வாழ்க்கையை அனுபவிக்கும் சொந்தம்.
இருமனங்கள் இணைந்த திருமண தினமிது.
வரவாக்கி மகிழ்ச்சியை கொண்டாடுது மனமது.
இந்த வாழ்வின் திருநாளில் எங்களுடன் சேர்ந்து, பிரென்டா ஜென்னிவர் சோபியா மற்றும் காயா குட்டியும் குதூகலத்தில் இணைந்து கொள்ள, பாமுகம் உறவுகளும் சேர்ந்துகொண்டு வாழ்த்துகின்றார்கள்.
இனிய இனிய திருமண நாள் வாழ்த்துகள்..
வாழிய பல்லாண்டு.
- 31/01/2025
இருவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
இனிய திருமணநாள் வாழ்த்துகள்
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
வணக்கம்
எங்களை வாழ்த்திய பாமுக உறவுகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள் தம்பதிகள்
நிலவும் வானமும் போல்
ஒருவருக்கு ஒருவர்
ஒளி கொடுத்து
இல்லறம் இனிக்க
நல்லறம் தொடர வாழ்த்துக்கள்
திரு திருமதி ஜெயம்&ஜெயமலர் தம்பதிகளுக்கு
இனிய திருமண நாள் நல் வாழ்த்து பாமாலை.
இல்லறவாழ்வின் 35ம் ஆண்டின் நிறைவு நாளாம் இன்று
உறை பனி நிறை திகழ் தை மாதம்
முத்தான மூன்று மக்கள் குடை பிடிக்க
குலவிளக்காம் பேத்தி காயா பூத் தெளிக்க
மரு மகனும் மாமனுடன் கூட வர
யாவும் இனிதேயென மனம் மகிழ
உற்றம் சுற்றமுடன் பாமுக உறவுகளும் வாழ்த்தி நிற்க
வாழையடி வாழையாக சொந்தங்கள் பெருகி வர
மங்களமாய் பெருமை கண்டு
மனம் நிறைவாய் இன்பம் கொண்டு
பல்லாண்டு வாழ்ந்திடவே
இறையாசீர் கூடி வர
அன்புடனே வாழ்த்துகின்றோம்
இனிய இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்..
இல்லற வாழ்வில் ஆண்டுகள் முப்பத்திஐந்தினைக் கண்ட இணையர்களை இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். பல்லாண்டு பல்லாண்டு வளமோடு வாழியவே. இனிய இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
இருவருக்கும் இனிய இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள். வளமுடனும் நலமுடனும் வாழ்க வாழ்க. 🎁💐
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக! இல்லற வாழ்வில் மட்டுமல்ல இணைய வாழ்விலும் இணையராய்ப் பயணித்தே குதூகலம் காணும் குடும்பமாய் குவலயம் போற்ற வாழ்வீர்களாக! வாழ்க பல்லாண்டு!
உற்சாக வணக்கம்
இன்று திருமணநாள் மகிழ்வில் 35 ஆண்டு குதூகலமகிழ்வுடன் இணையும் மகிழ்வுறு தம்பதிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துக்கிறோம் கூடி
பாமுக இணைவின் பற்றுக்கும், மகிழ்ச்சி நிறை வாழ்விற்கும் அன்பு வாழ்த்துக்கள்.
திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா
வாழ்க பல்லாண்டு 💐