சந்தம் சிந்தும் கவிதை

Jeyam

திமிர்

பொய்யாக வேடம் போட்டு நடிப்பவர் இடையில் 

மெய் பேசி உலவுகின்றேன் திமிரான நடையில்

பிழையாய் நினைத்து விடுவாரோவென வாழ்வதோ பயந்து 

பிழை விடாது வாழுகின்றேன் செயல்களாலே உயர்ந்து 

யாரோடு என்றாலும் மனதிற்பட்டதை பட்டென பேசுகின்றேன் 

ஊரோடுநான் ஒத்துப்போகவில்லை எனக்கூறுவோரால் கூசுகின்றேன் 

நான் செய்வது பிடிக்காவிடின் முகத்திற்குமுன்பாக கூறலாம் 

தான்தனக்குள் தவறான புரிதல் இப்படி யார்யாரெலாம் 

என்னையடக்க நினைப்போர்க்கு மனதிலேனோ பட்டது கறை

தன்மானத்தை இழக்காது வாழ்கின்றேன் இதற்குள்ளேயேனோ ஒருகுறை 

கட்டுப்பாடுகள் போட்டு என்னை அடக்கிக்கொள்ள முடியாது 

திட்டம்போட்டு கவிழ்க்க நினைப்பினுமென் திமிர் படியாது 

ஜெயம் 

06-03-2022