சந்தம் சிந்தும் கவிதை

Jeyam

வேண்டாம் வேண்டாமே

கடவுள் படைத்த அழகான உலகம்

அடக்கி ஆண்டுவிடும் மனிதரால் கலகம்

எத்தனையோ வளங்களை எல்லையாக்கிய பார்

அத்தனையையும் அழிக்கும் அதிகாரத்தின் போர்

கேட்பாரற்று கிடக்கவில்லை பூக்களின் தோட்டம் 

பார்ப்பாரில்லையென புகுந்ததனுள் பூப்பறித்து ஆட்டம் 

சொந்த இனத்தையே அழிக்கும் காட்டுப்புத்தி 

சிந்தி மனிதா மனிதநேயம் அதைப்பற்றி

நொடிக்கொருமுறை வெடிக்கும் வெடி குண்டுகள் 

துடிதுடித்து மடிபவரின் சிதறும் சதை துண்டுகள் 

சுடுகாடாக உலகைமாற்றும் யுத்தமும் வேண்டாமே

குடிகொண்டு சமாதானம் புத்தரின்பூமி வேண்டுமே 

ஜெயம் 

28-02-2022