சந்தம் சிந்தும் கவிதை

Jeyam

சாந்தி

குழம்பிப் போயிருக்கு காலமடா 

புலம்பியே கழியுது நாளுமடா 

சாந்தியது மனதில் பிறந்திடுமா 

ஏந்தியதை மண்வாழ்வும் சிறந்திடுமா 

நாளும்பொழுதும் இயந்திரகதியாக அலைச்சல் 

சூழும் நீளுமழுத்தங்களால் மனவுளைச்சல் 

எனக்கான நடவடிக்கைகளின் அதிகரிப்பு 

கணக்கில்லாப் பளுக்களால் உத்தரிப்பு 

தேவையற்ற விவகாரங்கள் ஆக்கிரமிப்பு 

கோர்வையாக பிரச்சினைகள் கையிருப்பு 

எங்கும் எதிலுமே நிம்மதியின்மை 

தங்கும் வரைக்கும் இதுவேயுண்மை. 

ஜெயம்

20-02-2022