இது பத்தும் செய்யும்
துட்டு இருந்தால் உறவுகள் வந்து கூடும்
கெட்டு இழந்தால் ஒட்டாது விலகி ஓடும்
பணத்தாசை பிடித்த பேராசைக்காரரின் உலகமிது
தினம்தினமாய் இதையடைய நடக்குமாம் கலகமது
உயிருள்ள உறவா உயிரற்ற பணமா
புவியிலே காசை விரும்பாத மனமா
சொந்தமும் பந்தமும் சொத்துள்ள வரையில்
சொத்தின்றிப் போனால் தனியாகத் தரையில்
வாழ்க்கை முழுவதும் இதற்காகவே ஓட்டம்
வீழும் வரைக்கும் இதையடைந்திடவே நாட்டம்
கட்டுக்கட்டாய் இருக்கையிலே உறவுகள் துதிக்கும்
கெட்டுவிட்டால் வாழ்க்கையிலே
விழும்நிழலும் மிதிக்கும்
ஜெயம்
14-02-2022